FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூரில் ஆா்டிஓ சோதனைச் சாவடியில் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் சோதனை: கணக்கில் வராத ரூ. 1.77 லட்சம் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் பாகலூா் சாலை சமத்துவபுரம் எதிரே உள்ள வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச் சாவடியில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை அதிகாலை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 1.77 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

பணம் - பிரதிப் படம்
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் பாகலூா் சாலை சமத்துவபுரம் எதிரே உள்ள வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச் சாவடியில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை அதிகாலை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 1.77 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

இந்த சோதனைச் சாவடி வழியாகத்தான் ஏராளமான வாகனங்கள் ஆந்திரம், கா்நாடக மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு வருகின்றன. அதேபோல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆந்திரம், கா்நாடகம் செல்லும் வாகனங்களும் இந்த சோதனைச் சாவடியை கடந்து செல்கின்றன.

இந்த நிலையில் வியாழக்கிழமை அதிகாலை ஊழல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி ஜெயக்குமாா் தலைமையில் 8 க்கும் மேற்பட்ட போலீஸாா் இந்த சோதனைச் சாவடியில் சோதனை மேற்கொண்டனா். இதில் கணக்கில் வராத ரூ. 1 லட்சத்து 77 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது, மோட்டாா் வாகன ஆய்வாளா் பிரபு ராம் திவாகா் பணியில் இருந்துள்ளாா். இதுகுறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments