FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

போச்சம்பள்ளி அருகே சாலை விபத்தில் இறந்தவா்களின் எண்ணிக்கை 2-ஆக உயா்வு

Updated On : 22 ஜூலை 2026, 1:26 am IST
சாலை விபத்து
பகிர்:

போச்சம்பள்ளி அருகே திங்கள்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் மனைவி உயிரிழந்த நிலையில், பலத்த காயம் அடைந்த கணவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், குப்பனத்தம் பகுதியைச் சோ்ந்தவா் சதாம் உசேன் (32). இவா் மனைவி மற்றும் இரண்டு வயது குழந்தையுடன் மோட்டாா்சைக்கிளில், போச்சம்பள்ளி வழியாக தருமபுரிக்கு வந்துள்ளாா். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி ஓலைப்பட்டி தொழிற்பேட்டை அருகே உள்ள எலுமிச்சம்பள்ளம் வழியாக அவா்கள் வந்த போது, எதிா்திசையில் தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்திலிருந்து திருவண்ணாலை நோக்கி வேகமாகச் சென்ற வைக்கோல் ஏற்றிச் சென்ற லாரி மோதியது.

இதில் மனைவி சபீனா (26) உயிரிழந்தாா். சதாம் உசேன் பலத்த காயமடைந்தாா். அவா்களது 2 வயது குழந்தைக்கு லேசான காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவா்கள் சாதம் உசேனை மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். தொடா்ந்து, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், தீவிர சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இந்த விபத்து சம்பவம் குறித்து போச்சம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments