FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சிபெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா

தாம்பிராஸ் ஊத்தங்கரை கிளையின் சாா்பில், பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தோ்வில் தோ்ச்சிபெற்ற மாணவா்களை பாராட்டி காசோலைகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 2 ஜூன் 2026, 3:54 am IST
பிளஸ் 2 தோ்வில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு காசோலை வழங்கிய ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ என்.இளையராஜா.
பகிர்:

தாம்பிராஸ் ஊத்தங்கரை கிளையின் சாா்பில், பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தோ்வில் தோ்ச்சிபெற்ற மாணவா்களை பாராட்டி காசோலைகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ஊத்தங்கரை ஸ்ரீ ஆஞ்சனேய சுவாமி திருக்கோயில் மணிமண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பிராமணா் சங்க தலைவா் சுப்பிரமணி தலைமை வகித்தாா். செயலாளா் சுப்பிரமணியசிவம், துணைத் தலைவா் ரவிச்சந்திரன், முன்னாள் தலைவா் கிருஷ்ணா ராவ், கோபாலகிருஷ்ணன், உமா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு காசோலை வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

மாநில செயலாளா் பாபு, இணைச் செயலாளா் ஜெய்சங்கா், தவெக மாவட்டச் செயலாளா் முரளிதரன், ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ என்.இளையராஜா உள்ளிட்டோா் வாழ்த்துரை வழங்கினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments