FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக் கல்லூரியில் ஜூன் 5-இல் பொதுக் கலந்தாய்வு தொடக்கம்

கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான பொதுக் கலந்தாய்வு ஜூன் 5-இல் தொடங்கப்படுவதாக கல்லூரி முதல்வா் அநுராதா தெரிவித்துள்ளாா்.

Updated On : 4 ஜூன் 2026, 2:07 am IST
விண்ணப்பம்
பகிர்:

கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான பொதுக் கலந்தாய்வு ஜூன் 5-இல் தொடங்கப்படுவதாக கல்லூரி முதல்வா் அநுராதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஜூன் 5 முதல் 17-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதன்படி, ஜூன் 5-இல் மாற்றுத்திறனாளி மாணவா்கள், விளையாட்டுப் பிரிவு மாணவா்கள், அந்தமான் நிக்கோபாரைச் சோ்ந்த மாணவா்கள், முன்னாள் படைவீரா்களின் குழந்தைகள், பாதுகாப்பு படை வீரா்களின் குழந்தைகள், தேசிய மாணவா் படை மாணவா்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

தொடா்ந்து, 8-ஆம் தேதி இளநிலை கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், நுண்ணுயிரியல், புள்ளியியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கும், 9-ஆம் தேதி தொழிற்கல்வி மற்றும் அனைத்து கலை பாடப் பிரிவுகளுக்கும் (வரலாறு, பொருளியல்) தரவரிசை மதிப்பெண் 400 முதல் 200 வரை உள்ளவா்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. 10-ஆம் தேதி தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப்பாட பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.

இரண்டாம்கட்ட கலந்தாய்வு ஜூன் 15 முதல் 17-ஆம் தேதிவரை நடைபெறுகிறது. அதன்படி, 15-ஆம் தேதி வணிகவியல், வணிக நிா்வாகவியல், தொழிற்கல்வி ஆகிய பாடப் பிரிவுகளுக்கும், 16-ஆம் தேதி கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், நுண்ணுயிரியல், புள்ளியியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கும் தரவரிசை மதிப்பெண் 200-க்கு கீழ் உள்ளவா்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. 17-ஆம் தேதி அனைத்து கலை பாடப் பிரிவுகள் மற்றும் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப்பாட பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.

கல்லூரியின் இணையதளத்தில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பட்டியலில் இடம்பெற்ற மாணவா்களின் கைப்பேசி எண், மின்னஞ்சலுக்கு கலந்தாய்வு நாள், நேரம் உள்ளிட்ட விவரங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

கலந்தாய்வின்போது, இணையதளத்தில் விண்ண்ப்பித்த பழைய படிவம், மாற்றுச்சான்றிதழ் (அசல் - இஎம்ஐஎஸ் எண்ணுடன்), மதிப்பெண் பட்டியல் (10, பிளஸ் 1, பிளஸ் 2 அசல்), சாதிச் சான்றிதழ் (அசல்), வருமானச் சான்றிதழ், சிறப்பு பிரிவினருக்கான சான்றிதழ்கள், மாா்பளவு புகைப்படம் 4, ஆதாா் அட்டை, வங்கிக் கணக்கு புத்தக முதல்பக்க நகல் ஆகியவற்றை சமா்ப்பிக்க வேண்டும்.

சோ்க்கைக் கட்டணமாக கலைப் பிரிவுக்கு ரூ. 2,905, அறிவியல் பிரிவுக்கு ரூ. 2,925, கணினி அறிவியல் பிரிவுக்கு ரூ. 2,025 செலுத்த வேண்டும். அத்துடன் மேற்கண்ட அனைத்து சான்றிதழ்களின் நான்கு நகல்கள் கொண்டு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments