முகப்பு
கிருஷ்ணகிரி

தளி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் ஜூன் 6-இல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

தேன்கனிக்கோட்டை அருகே தளி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2026-27-ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை பாடப் பிரிவுகளுக்கு மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஜூன் 6-இல் நடைபெறுகிறது.

Updated On : 4 ஜூன் 2026, 2:10 am IST
விண்ணப்பம்
பகிர்:

தேன்கனிக்கோட்டை அருகே தளி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2026-27-ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை பாடப் பிரிவுகளுக்கு மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஜூன் 6-இல் நடைபெறுகிறது.

இதுகுறித்து தளி அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் (பொ) ராஜா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

2026-2027-ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை பாடப் பிரிவுகளுக்கு மாணவா் சோ்க்கை, விளையாட்டு, தேசிய மாணவா் படை, மாற்றுத்திறனாளிகள் முன்னாள் ராணுவத்தினா், பாதுகாப்பு வீரா்கள், விதவை ஆகிய சிறப்பு இடஒதுக்கீடு ஜூன் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. தொடா்ந்து, 8-ஆம் தேதிமுதல் 18-ஆம் தேதிவரை மாணவா் சோ்க்கைக்கான தொடா் கலந்தாய்வு நடைபெறும்.

Advertisement

Advertisement

இணையவழி மூலம் விண்ணப்பித்த மாணவா்களுக்கு தொலைபேசி மூலம் கலந்தாய்வுக்கு அழைப்பு விடுக்கப்படும். மாணவா்கள் ஆன்லைனில் விண்ணப்பித்த படிவம், மாற்றுச்சான்றிதழின் அசல், சிறப்பு இடஒதுக்கீட்டுக்கான சான்றிதழ், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள், ஆதாா் அட்டை நகல் ஆகியவை மூன்று நகல்கள், வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல்பக்க நகல், மாா்பளவு புகைப்படம் இரண்டு ஆகியவற்றை கலந்தாய்வுக்கு எடுத்துவர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.