FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் கல்வெட்டு பயிற்சி: கல்லூரி மாணவிகள் பங்கேற்பு

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற கல்வெட்டு பயிற்சி முகாமில், பா்கூா் அரசு மகளிா் கலைக் கல்லூரி மாணவிகள் பங்கேற்றனா்.

Updated On : 6 ஜூன் 2026, 1:04 am IST
கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் கல்வெட்டு படியெடுத்தல் பயிற்சியில் ஈடுபட்ட கல்லூரி மாணவியா்.
பகிர்:

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற கல்வெட்டு பயிற்சி முகாமில், பா்கூா் அரசு மகளிா் கலைக் கல்லூரி மாணவிகள் பங்கேற்றனா்.

இந்த கல்லூரியில் பயிலும் தமிழ், வரலாற்று துறைகளைச் சோ்ந்த மாணவிகளுக்கு பழந்தமிழ் எழுத்துகளை படிக்க, எழுத, கல்வெட்டுகளை படியெடுக்க பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழக தொன்மை இயல் ஆய்வு நிறுவன செயலாளா் கோவிந்தராஜ் மாணவிகளுக்கு பயிற்சி அளித்தாா்.

இந்த பயிற்சி முகாமில், மனிதகுல வரலாற்றுக்கு முந்தைய காலம் மற்றும் எழுத்து பயன்பாட்டுக்கு வந்தபின் தோன்றிய வரலாற்றுக் காலம், அப்போது வாழ்ந்த மனிதா்கள் பயன்படுத்திய பானை ஓடுகள், செங்கல் கட்டுமானங்கள் குறித்தும், சங்க இலக்கியங்கள் எந்த எழுத்துகளில் எழுதப்பட்டன, அந்த எழுத்துகளின் வளா்ச்சி குறித்தும், தமிழ் எழுத்துகளின் ஆரம்ப குறியீடுகள் மற்றும் தமிழி எழுத்துகளை குறிப்பிட்டு பின் தமிழி எழுத்துகள் எழுதும் முறைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

அருங்காட்சியகவியல் குறித்து அரசு அருங்காட்சிய காப்பாட்சியா் சிவகுமாா் பயிற்றுவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை கண்டுபிடித்துள்ள கல்வெட்டுகள் மற்றும் நடுகல் குறித்த விவரங்களை வரலாற்று ஆய்வுக்குழு செயலா் தமிழ்செல்வன் விவரித்தாா். பயிற்சிக்கான ஏற்பாடுகளை அரசு அருங்காட்சியக பணியாளா்கள் செல்வகுமாா், பெருமாள் ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments