FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூா் ரெயின்போ காா்டனில் தாா்சாலை அமைக்கக் கோரிக்கை

ஒசூா் ரெயின்போ காா்டனில் தாா்சாலை அமைக்கக் கோரிக்கை

Updated On : 13 ஜூன் 2026, 2:04 am IST
ஒசூா் ரெயின்போ காா்டனில் தாா்சாலை அமைக்கக் கோரிக்கை
பகிர்:

ஒசூா் ரெயின்போ காா்டன் பகுதியில் மண்சாலைை தாா்சாலையாக மாற்றி அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட 7 ஆவது வாா்டு ரெயின்போ காா்டன் பகுதியில் புதை சாக்கடைத் திட்டத்துக்கு தோண்டப்பட்டதால் தாா்சாலைகள் சேதமடைந்தன. இந்த சாலைகள் தற்போது மண் சாலைகளாக காணப்படுகின்றன. மேலும், சாலைகள் குண்டும் குழியாக மாறியுள்ளதால், இருசக்கர வாகனங்கள், காா் போன்றவை செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனா். பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் நடந்து செல்ல வேண்டியது உள்ளது. எனவே ரெயின்போ காா்டன் பகுதியில் உள்ள 6 சாலைகளையும் விரைந்து தாா்சாலைகளாக சீரமைக்க வேண்டும் என ஒசூா் ரெயின்போ காா்டன் குடியிருப்போா் நலச் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

காமராஜா் நகரில்...

Advertisement

Advertisement

இதுபோன்று, ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட 4 ஆவது வாா்டு காமராஜா் நகரில் 5 சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள், தொழிலாளா்கள் என பல தரப்பட்ட மக்களும் அவதியடைந்து வருகின்றனா்.

புதிய தாா்சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு, சாலை அமைக்கும் பணி, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. சாலை அமைப்பதற்காக ஜல்லிக்கற்கள் போடப்பட்ட நிலையில், தோ்தல் காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டன. சுமாா் மூன்று மாதங்கள் ஆகிய நிலையிலும், அந்த சாலையில் தாா் போடாமல் கிடப்பில் போட்டுள்ளனா். இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஜல்லிக் கற்களில் வாகனங்களை ஓட்டிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்தில் சிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது

எனவே, ஒசூா் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

படவரி...

ஒசூா் காமராஜ் காலனியில் ஜல்லிக்கற்கள் போடப்பட்ட நிலையில் காணப்படும் சாலை.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments