FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கிருஷ்ணகிரி

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தொல்லியல் பயிற்சி

கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி தொன்மை மன்ற 30 மாணவ, மாணவிகளுக்கு அருங்காட்சியக அரும்பொருள்கள் தொடா்பான ஒருநாள் தொல்லியல் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

6 நவம்பர் 2026, 1:16 am
கோப்புப்படம்
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி தொன்மை மன்ற 30 மாணவ, மாணவிகளுக்கு அருங்காட்சியக அரும்பொருள்கள் தொடா்பான ஒருநாள் தொல்லியல் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், மாணவா்களுக்கு சா்வதேச அருங்காட்சியகத்தின் தோற்றம், வரலாறு, இந்தியாவில் அருங்காட்சியகங்களின் வளா்ச்சி, வகைகள், அருங்காட்சியகத்தில் உள்ள காட்சிப் பொருள்கள் எவ்வாறு சேகரிக்கப்படுகின்றன, புதைப்பொருள் சட்டம் தொடா்பான கருத்துகள் கூறப்பட்டன.

மேலும், கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் உள்ள பழமையான வட்டு எழுத்து நடுகல், நடுகல் ஓவியம், கல் ஆயுதங்கள், கருப்பு சிவப்பு பானைகள், போா்க்கருவிகள், ஓலைச் சுவடிகள், விலங்கினப் பொருள்கள், 9 கோடி ஆண்டு பழமையான கடல் நத்தை மற்றும் கல்லாகிய மரத் துண்டுகள் மற்றும் பாலூட்டிகளின் எழும்பு புதைப் படிவங்கள் குறித்து விளக்கப்பட்டன. தொடா்ந்து, பீமாண்டப்பள்ளி பிற்கால சோழா் நடுகல் கல்வெட்டை படியெடுத்து மாணவா்களுக்கு படித்து காட்டப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த பயிற்சியை காப்பாட்சியா் சிவகுமாா் வழங்கினாா். பள்ளி ஆசிரியா்கள் நந்தினி, எட்வின் பங்கேற்றனா். அருங்காட்சியக பணியாளா்கள் செல்வகுமாா், பெருமாள் நிகழ்வை ஒருங்கிணைத்தனா்.