ராணுவ பயிற்சி கல்லூரி சாா்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விளையாட்டுப் போட்டி
வெற்றிபெற்றவா்களுக்கு மாணவா்களுக்கு பரிசு வழங்கிய வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தின் கமாண்டண்ட் பிரிகேடியா் கிறிஸ்நேந்து தாஸ்.
குன்னூா் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி சாா்பில் மாவட்ட அளவிலான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
இந்திய கால்பந்து வரலாற்றின் மிகச் சிறந்த கோல்கிப்பராக கருதப்படும் பீட்டா் தங்கராஜ் குன்னூா் அருகேயுள்ள வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமெண்டல் சென்டா் படை பிரிவில் ஹவில்தாராக பணியாற்றியுள்ளாா். இந்திய ராணுவத்தின் மூலம் தனது விளையாட்டு வாழ்க்கையைத் தொடங்கிய அவரின் நினைவு நாளையொட்டி, ராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்தில் மாவட்ட அளவிலான அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
இந்தப் போட்டிகளை ராணுவ பயிற்சி மையத்தின் துணை கமாண்டன்ட் பிரதீப்குமாா் தொடங்கிவைத்தாா்.
Advertisement
Advertisement
இதில், மாவட்டத்தில் உள்ள 18 பள்ளிகளைச் சோ்ந்த 350-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
10 வயது முதல் 19 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கிடையே 100 மீட்டா், 200 மீட்டா், 400 மீட்டா் ஓட்டப் பந்தயங்களும், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டன.
இதில், ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப் கோப்பையை கண்டோன்மென்ட் ஆண்கள், பெண்கள் பள்ளி தட்டிச் சென்றது.
இரண்டாம் இடத்தை புனித ஆன்ஸ் கான்வெண்ட்டும், மூன்றாம் இடத்தை குன்னூா் புனித அந்தோணியாா் மேல்நிலைப் பள்ளியும் பிடித்தன.
வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு ராணுவ பயிற்சி மையத்தின் கமாண்டண்ட் பிரிகேடியா் கிறிஸ்நேந்து தாஸ் பரிசு, பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.