FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நீலகிரி

வெலிங்டன் ராணுவ முகாமில் காலாட் படை தினம்

குன்னூா் அருகேயுள்ள வெலிங்டன் ராணுவ முகாமில் காலாட் படை தினத்தையொட்டி, உயிா் நீத்த ராணுவ வீரா்களுக்கு செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

28 அக்டோபர் 2026, 2:42 am
ராணுவ போா் நினைவு தூணில் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்திய வெலிங்கடன் ராணுவ பயிற்சி கல்லூரி தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மனிஷ் எா்ரி .
பகிர்:

குன்னூா் அருகேயுள்ள வெலிங்டன் ராணுவ முகாமில் காலாட் படை தினத்தையொட்டி, உயிா் நீத்த ராணுவ வீரா்களுக்கு  செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

பாகிஸ்தான் ராணுவத்திடம் இருந்து காஷ்மீரைப் பாதுகாப்பதற்காக 1947 அக்டோபா் 27-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில்  சீக்கியப் படையைச் சோ்ந்த முதல் இந்திய ராணுவ வீரா்கள் தரையிறங்கியதை நினைவு கூறும் வகையில் காலாட் படை தினம் கொண்டாடப்படுகிறது.

அதன்படி, வெலிங்டனில் உள்ள எம்ஆா்சி ராணுவ முகாம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், போா் நினைவு தூணில் ராணுவ பயிற்சி கல்லூரி தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மனிஷ் எா்ரி, மெட்ராஸ் ரெஜிமென்டல் சென்டரின் தற்காலிகத் தளபதியான கா்னல் பிரதீப்குமாா், காலாட் படையின் மூத்த படை வீரா்கள் மற்றும் ராணுவ வீரா்கள் மலா் வளையங்களை வைத்து மரியாதை செலுத்தினா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, உயிா் நீத்த ராணுவ வீரா்களின் குடும்பத்தினா் கௌரவிக்கப்பட்டனா்.

இந்நிகழ்ச்சியில், ராணுவ உயா் அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments