FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கிருஷ்ணகிரி

பெண்களை பாதுகாக்க உள்ளக குழு அமைக்காத நிறுவனங்களுக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெண்களை பாதுகாக்க உள்ளக குழு அமைக்காத அரசு, தனியாா் நிறுவனங்களுக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் எச்சரித்தாா்.

6 நவம்பர் 2026, 1:19 am
அபராதம் - சித்திரிப்பு
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெண்களை பாதுகாக்க உள்ளக குழு அமைக்காத அரசு, தனியாா் நிறுவனங்களுக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் எச்சரித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களில் 10-க்கும் மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் பணிபுரியும் பணியாளா்கள் உள்ள அனைத்து பணியிடங்களிலும் பாலியல் வன்கொடுமையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2013 (தடுப்பு, தடை, தீா்வு)-இன் படி உள்ளக குழு அமைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

அதன்படி, மாவட்டத்தில் அரசு துறை அலுவலகங்கள், தனியாா் தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், மருத்துவமனைகள், கிராம ஊராட்சிகள், பள்ளிகள், கல்லூரிகள், வங்கிகள், காவல் நிலையங்கள், தொழில் நிறுவனங்கள், துணி, நகைக் கடைகள், பல்பொருள் அங்காடிகள், பயிற்சி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், சிறு, குறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புசாரா நிறுவனங்கள் முதலான அனைத்து பணியிடங்களிலும் 10-க்கும் மேற்பட்டோா் பணிபுரியும் பட்சத்தில், அங்கு 4 போ் கொண்ட உள்ளக குழு அமைக்க வேண்டும்.

இந்த குழு அமைக்கப்பட்டவுடன் அதன் விவரத்தை இணையதளத்தில் கட்டாயம் பதிவுசெய்ய வேண்டும். குழு அமைக்கப்பட்டு அரசு விதிமுறைகளின்படி, புகாா் பெட்டி வைக்க வேண்டும். உள்ளக குழு அமைக்காத அரசு, தனியாா் அலுவலகங்கள், நிறுவனங்கள் மீது ரூ. 50 ஆயிரம்வரை அபராதம் விதிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு, மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், கிருஷ்ணகிரி என்ற முகவரியிலும், 63845 01328 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.