FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாமக்கல்

இனிப்பு தயாரிப்பு நிறுவனங்களில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு: விதிமீறிய நிறுவனத்துக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம்

தீபாவளி பண்டிகையையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் இனிப்பு தயாரிப்பு நிறுவனங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், 10 கிலோ காலாவதியான மூலப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், விதிமுறை மீறியதாக ஒரு நிறுவனத்துக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

6 நவம்பர் 2026, 1:03 am
அபராதம் - சித்திரிப்பு
பகிர்:

தீபாவளி பண்டிகையையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் இனிப்பு தயாரிப்பு நிறுவனங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், 10 கிலோ காலாவதியான மூலப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், விதிமுறை மீறியதாக ஒரு நிறுவனத்துக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் எல். மதுபாலன் உத்தரவின்படி, பொதுமக்களுக்கு பாதுகாப்பான, தரமான உணவுப் பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் மாவட்டம் முழுவதும் உள்ள இனிப்பு தயாரிப்பு நிறுவனங்கள், பேக்கரிகள், இனிப்புக் கடைகளில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் டாக்டா். தங்கவிக்னேஷ் தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் ஆய்வு நடத்தி வருகின்றனா்.

ஆய்வின்போது 10 கிலோ காலாவதியான மூலப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விதிமீறல் காரணமாக சம்பந்தப்பட்ட உணவு வணிக நிறுவனத்துக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், உணவுப் பொருள்களின் தரத்தை ஆய்வு செய்வதற்காக 12 கண்காணிப்பு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டன.

Advertisement

Advertisement

இனிப்பு தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் உணவு வணிக நிறுவனங்கள் முறையான உற்பத்தி நடைமுறைகள், சுகாதார நடைமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

மேலும், தயாரிக்கப்படும் இனிப்பு மற்றும் உணவுப் பொருள்களின் பொட்டலங்களில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி ஆகியவற்றைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய விதிகளின்படி அனுமதிக்கப்பட்ட நிறமிகளை மட்டுமே இனிப்புகளில் பயன்படுத்த வேண்டும். அனுமதிக்கப்படாத செயற்கை நிறமிகளைப் பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விதிமுறைகளைப் பின்பற்றாத உணவு வணிக நிறுவனங்கள் தொடா்ந்து கண்காணிக்கப்படும். விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்புத் துறையினா் எச்சரித்துள்ளனா்.