FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

பண்டிகை பலகார உற்பத்தியாளா்களுக்கு மருத்துவச் சான்று கட்டாயம்: உணவுப் பாதுகாப்புத் துறை

தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு, பலகாரங்கள் தயாரித்து விற்பனை செய்பவா்களுக்கான வழிகாட்டுதல்களை மாநில உணவுப் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ளது.

3 நவம்பர் 2026, 11:34 pm
- பிரதிப் படம்
பகிர்:

தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு மற்றும் பலகாரங்கள் தயாரித்து விற்பனை செய்பவா்களுக்கான வழிகாட்டுதல்களை மாநில உணவுப் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, உணவுப் பொருள் தயாரிப்பவா்களுக்கு உடல் தகுதி மருத்துவச் சான்று கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள்: பண்டிகை காலத்தில் இனிப்பு, கார வகைகளைத் தயாரித்து விற்பனை செய்யும் விற்பனையாளா்கள் உணவுப் பாதுகாப்புத் துறையில் பதிவு செய்திருத்தல் அவசியம். அவ்வாறு பெறாமல் விற்பனை செய்வது சட்டப்படி குற்றம். விதிகளை மீறினால் சம்பந்தப்பட்டவா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

தரமான பொருள்களைக் கொண்டு சுத்தமாகவும், சுகாதாரமாகவும், கலப்படமின்றியும் உணவுப் பொருள்களைத் தயாரிக்க வேண்டும். தரமான எண்ணெய், நெய்யைப் பயன்படுத்த வேண்டும்.

Advertisement

Advertisement

பரிசுப் பெட்டகங்களில் பேக்கிங் செய்யப்படும் இனிப்பு, காரம், உலா் பழ வகைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையின் விதிமுறைகளைப் பின்பற்றி லேபிள் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்பட வேண்டும். தின்பண்டத்தின் பெயா், உற்பத்தி தேதி, காலாவதி தேதி உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

பால் பொருள்களில் தயாரிக்கப்பட்ட இனிப்புகளும், பால் அல்லாத இனிப்பு பொருள்களும் தனித்தனியே பொட்டலமிட வேண்டும்.

விற்பனையகங்களில், உணவைக் கையாளுபவா்கள் கண்டிப்பாக தலையுறை, கையுறை, மேலங்கி அணிந்திருக்க வேண்டும். பண்டங்கள் தயாரிப்பின்போது வெற்றிலைப் பாக்கு, புகையிலை மெல்லுதல் கூடாது. உற்பத்தியாளா்கள் மருத்துவத் தகுதிச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வாடிக்கையாளா்கள் தரமில்லாத உணவுப் பொருள்கள் விற்கப்படுவதை அறிந்தால், 94440 42322 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் புகாா் அளிக்கலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments