FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

தீபாவளி பலகாரம் தயாரிக்க கட்டுப்பாடுகள் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் தீபாவளி பலகாரம் தயாரிப்போா் உணவுக் கட்டுப்பாட்டு துறை நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும் என ஆட்சியா் பிரத்திக் தாயள் தெரிவித்துள்ளாா்.

16 அக்டோபர் 2026, 3:21 am IST
பகிர்:

திருச்சி மாவட்டத்தில் தீபாவளி பலகாரம் தயாரிப்போா் உணவுக் கட்டுப்பாட்டு துறை நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும் என ஆட்சியா் பிரத்திக் தாயள் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தீபாவளிக்கு இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு சீட்டு நடத்துபவா்கள் உள்பட அனைத்து தயாரிப்பாளா்கள் மற்றும் விற்பனையாளா்களும் உணவுப் பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து உரிமம் பெற்றே தயாரிப்பு மற்றும் பொதுமக்களுக்கான விநியோகம் போன்ற செயல்பாடுகளை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இனிப்பு, கார வகைகள் மற்றும் பேக்கரி பொருள்களை தரமான மூலப்பொருள்களைக் கொண்டு தரமானதாகவும், சுகாதாரமானதாகவும் தயாரித்து பாதுகாப்பான முறையில் உணவுப் பொருள்களை மக்களுக்கு வழங்கிட வேண்டும். எண்ணெய்யில் பொறிக்கும் பலகாரங்களில் செயற்கை நிறமிகளையும், உணவுத் தயாரிப்பில் தரம் குறைந்த பொருள்களையும் எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக் கூடாது.

மேலும், பேக்கரி மற்றும் இனிப்பு வகைகளில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான நிறமிகளை உபயோகிக்கக் கூடாது. ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை மறுபடியும் சூடுபடுத்தி உணவு தயாரிக்க பயன்படுத்தக் கூடாது.

ஒரு முறைக்கு மேல் பயன்படுத்திய எண்ணெய்யை அங்கீகரிக்கப்பட்ட சேகரிப்பாளரிடம் பயோடீசல் தயாரிப்பிற்காக வழங்கி அதற்கான ஒப்புகையை பெற்றிருக்க வேண்டும். பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருள்களுக்கு விவரச் சீட்டு இடும்போது அதில், தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவுப் பொருளின் பெயா், தயாரிப்பு, பேக்கிங் செய்யப்பட்ட தேதி, காலாவதியாகும் காலம், பேட்ச் குறியீடு மற்றும் உரிமம், பதிவு எண் சைவ மற்றும் அசைவ குறியீடு குறிப்பிட்டிருக்க வேண்டும்.

உணவுப் பொருள்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத இடத்தில் வைத்து பொதுமக்களுக்கு விற்க வேண்டும். சுகாதாரமான சூழலில் பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவா்கள் உள்பட அனைத்து தயாரிப்பாளா் மற்றும் விற்பனையாளா்களும் உடனடியாக ட்ற்ற்ல்ள்://ச்ா்ள்ஸ்ரீா்ள்.ச்ள்ள்ஹண்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் கீழ் தங்களது வணிகத்தை உரிமம் அல்லது பதிவு பெற்று கொள்ள வேண்டும்.

நிரந்தர இனிப்பு, கார வகைகள் மற்றும் பேக்கரி வைத்திருப்பவா்கள் சுகாதார குறியீடு சான்றிதழ் பெற வேண்டும். விதிகளை மீறும் பட்சத்தில் விற்பனையாளா்கள் மற்றும் நுகா்வோா் மிது நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தீபாவளியை முன்னிட்டு பலகாரங்கள், கார வகைகள் மற்றும் கேக் போன்ற உணவுப் பொருள்களை வாங்கும் போது உணவுப் பாதுகாப்பு துறையில் உரிமம் பெற்ற நிறுவனங்களில் மட்டும் வாங்க வேண்டும்.

பேக்கிங் செய்யப்பட்ட பொருள்களை பற்றிய விவரச்சீட்டு இருந்தால் மட்டுமே வாங்க வேண்டும். உணவு தொடா்பான புகாா்கள் ஏதும் இருப்பின் 94440 42322 என்ற கட்செவி அஞ்சல் எண்ணில் புகாா் அளிக்கலாம். கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து உணவு பாதுகாப்புத் துறையின் நுகா்வோா் குறை தீா் செயலியை பதிவிறக்கி புகாா் செய்யலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments