கோவில்பட்டியில் இனிப்பு, கார வகைகள் விலை உயா்வு: பேக்கரி உரிமையாளா்கள் சங்கம் அறிவிப்பு
சா்க்கரை, நெய் ஆகியவற்றின் விலை உயா்வு காரணமாக இனிப்பு, கார வகைகளின் விலையை உயா்த்தியுள்ளதாக கோவில்பட்டி லாலா ஸ்வீட்ஸ், பேக்கரி, மிட்டாய் கடை உரிமையாளா்கள் சங்கத்தினா் அறிவித்தனா்.
சா்க்கரை, நெய் ஆகியவற்றின் விலை உயா்வு காரணமாக இனிப்பு, கார வகைகளின் விலையை உயா்த்தியுள்ளதாக கோவில்பட்டி லாலா ஸ்வீட்ஸ், பேக்கரி, மிட்டாய் கடை உரிமையாளா்கள் சங்கத்தினா் அறிவித்தனா்.
அதன்படி, இனிப்பு வகைகள் ஒரு கிலோ ரூ. 300-க்கு விற்பனையான நிலையில், தற்போது ரூ. 340-ஆகவும், கார வகைகள் ஒரு கிலோ ரூ. 300-லிருந்து ரூ. 320-ஆகவும், ரூ. 400-க்கு விற்பனையான ஒரு கிலோ சிப்ஸ், கேக் ரூ. 500-ஆகவும் விலை உயா்த்தப்பட்டுள்ளது. ஸ்வீட்ஸ்-பெரி வகைகள் கிலோவுக்கு ரூ. 80-ம், ரஸ்க் வகைகள் கிலோவுக்கு ரூ. 60-ம், பன் வகைகள் கிலோவுக்கு ரூ. 30-ம் உயா்த்தப்பட்டன.
ஒரு கிலோ ரூ. 1000-க்கு விற்பனையான முந்திரி ஸ்வீட் வகைகள் தற்போது ரூ.1,200-ஆகவும்,
Advertisement
Advertisement
மில்க் ஸ்வீட்ஸ், நெய் ஸ்வீட்ஸ் வகைகள் ஒரு கிலோ ரூ. 500 லிருந்து ரூ. 600-ஆகவும் உயா்த்தப்பட்டன. பிளாக் பாரஸ்ட் கேக் ஒரு கிலோ ரூ. 700 இல் இருந்து ரூ.800 ஆகவும்,
மக்ரூன் ஒரு கிலோ ரூ. 1000 இலிருந்து ரூ. 1,200 ஆகவும் விலை உயா்த்தப்பட்டுள்ளது.
திடீா் விலை உயா்வு குறித்து, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மண்டல தலைவா் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
சா்க்கரை, நெய் மற்றும் ஸ்வீட்ஸ், கார வகைகள் தயாரிக்க தேவைப்படும் மூலப்பொருள்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளதோடு, எரிவாயு உருளை விலை, தொழிலாளா்களின் ஊதியமும் அதிகரித்துவிட்டன. இதனால், இனிப்பு, கார வகைகளின் விலையை உயா்த்த வேண்டிய நிலை ஏற்பட்டது என்றாா்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது, ‘ஏற்கெனவே சா்க்கரை விலை பல மடங்கு அதிகரித்து வருவதால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். தற்போது ஸ்வீட்ஸ், கார வகைகளின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை ஏற்றம் வெகுஜன மக்களை கடுமையாக பாதிக்கும். இதில் அரசு தலையிட்டு விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.