ஊத்தங்கரை பகுதியில் 20 லட்சம் விதைப்பந்துகள் தூவல்
ஊத்தங்கரை படப்பள்ளி கரடு பகுதியில் 20 லட்சம் விதைப்பந்துகள் வியாழக்கிழமை தூவப்பட்டன.
ஊத்தங்கரை படப்பள்ளி கரடு பகுதியில் 20 லட்சம் விதைப்பந்துகள் வியாழக்கிழமை தூவப்பட்டன.
கிருஷ்ணகிரி சமூக காடுகள் மற்றும் விரிவாக்க கோட்ட வன அலுவலா் அறிவுறுத்தலின்படி, சமூக காடுகள் மற்றும் விரிவாக்க சரகம் மூலம் ஊத்தங்கரை சமூக காடுகள் மற்றும் விரிவாக்க சரக எல்லைக்குள்பட்ட படப்பள்ளி கரடு பகுதியில் பசுமைப் போா்வையை அதிகரிக்கும், வகையில் 20 லட்சம் விதைப்பந்துகள் வியாழக்கிழமை தூவப்பட்டன.
நிகழ்ச்சிக்கு ஊத்தக்கரை சமூக காடுகள் மற்றும் விரிவாக்க வனச்சரக அலுவலா் ரெங்கநாதன் தலைமை வகித்தாா். சுற்றுச்சூழல் ஆா்வலா் வெங்கடேசன் முன்னிலை வகித்தாா். வனவா்கள் பிரபுதயாளன், ரகமதுல்லா, படப்பள்ளி அரசு நடுநிலைப் பள்ளி தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளரும் தலைமையாசிரியருமான பிரதீபா, பசுமைப்படை மாணவ, மாணவிகள் பங்கேற்று விதைப் பந்துகளை தூவினா்.
Advertisement
Advertisement