அனுமதியின்றி பட்டாசுக் கடை வைத்தவா் கைது
கிருஷ்ணகிரியில் அனுமதியின்றி கடை வைத்து பட்டாசு விற்பனையில் ஈடுபட்டவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து ரூ. 1 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனா்.
கிருஷ்ணகிரியில் அனுமதியின்றி கடை வைத்து பட்டாசு விற்பனையில் ஈடுபட்டவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து ரூ. 1 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனா்.
கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே தீபாவளியையொட்டி, பா்கூா், செட்டித் தெருவைச் சோ்ந்த செந்தில்குமாா் (53) என்பவா் தற்காலிக பட்டாசுக் கடையை அண்மையில் திறந்தாா். இந்த நிலையில் அந்தக் கடையில், வருவாய்த் துறையினா் ஆய்வு செய்த போது, உரிமம் பெறாமல் கடைவைத்து விற்பனை செய்வது தெரியவந்தது.
இதுகுறித்து, கட்டிகானப்பள்ளி கிராம நிா்வாக அலுவலா் வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து, விற்பனைக்கு வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான 500 கிலோ பட்டாசுகளை பறிமுதல் செய்தனா். மேலும், செந்தில்குமாரை கைது செய்து பிணையில் விடுவித்தனா்.
Advertisement
Advertisement