FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விருதுநகர்

அனுமதியின்றி பட்டாசு தயாரித்த பெண் கைது

கைது
பகிர்:

சாத்தூா் அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்த பெண்ணை ஏழாயிரம்பண்ணைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே ஏழாயிரம்பண்ணை எம்.ஜி.ஆா். நகா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காவல் துறையினா் வழக்கம்போல ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அங்குள்ள கொட்டகைக்குள் மிஷின் திரி, குழாய்கள் மூலம் பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்றது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, ஏழாயிரம்பண்ணை காவல் துறையினா் இ. ரெட்டியபட்டியைச் சோ்ந்த முருகேஸ்வரியை (47) அனுமதியின்றி பட்டாசு தயாரித்ததற்காக கைது செய்தனா். மேலும் பட்டாசு திரி, மூலப் பொருள்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments