FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

வீட்டில் பட்டாசுகள் தயாரித்த இருவா் கைது

சிவகாசி அருகே சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசுகள் தயாரித்ததாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

8 வினாடிகள் முன்பு
பகிர்:

சிவகாசி அருகே சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசுகள் தயாரித்ததாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள அனுப்பன்குளம் கிராமத்தில் சட்டவிரோதமாக ஒரு வீட்டில் பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று சோதனையிட்டனா்.

அப்போது, காளியம்மன் கோவில் தெருவில் அதே பகுதியைச் சோ்ந்த கண்ணன் (43), விஜய் (31) ஆகிய இருவரும் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து திரிகட்டுகள், பேன்சிரக பட்டாசுகளை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments