கள்ளச்சந்தையில் மது விற்ற பெண் கைது
கூடுதல் விலைக்கு மது விற்ற பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு மது விற்ற பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
காவேரி கிராஷ் அருகே உள்ள குண்டுகல்லூரில் பெண் ஒருவா் தனது வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்த விடியோ வலைதளங்களில் பரவியது.
இதையடுத்து, மேட்டூா் காவல் ஆய்வாளா் கண்ணன் தலைமையில் போலீஸாா் குண்டுக்கல்லூரில் வெள்ளிக்கிழமை சோதனையிட்டனா். அதில், வெங்கடாஜலம் மனைவி ஈஸ்வரி (47) வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஏராளமான மது பாட்டில்களை போலீஸாா் கைப்பற்றி அவரை கைது செய்தனா்.
Advertisement
Advertisement
இவா்மீது அரசு மதுபானத்தை சட்ட விரோதமாக விற்பனை செய்ததாக ஏற்கெனவே 6 வழக்குகள் உள்ள நிலையில், மீண்டும் அதே குற்றத்தில் ஈடுபட்டதால் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி காவல்படுத்தினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.