பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 13 வடமாநில தொழிலாளா்களுக்கு வாந்தி, மயக்கம்
ஒசூா் அருகே பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட வடமாநிலத் தொழிலாளா்கள் 13 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
ஒசூா் அருகே பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட வடமாநிலத் தொழிலாளா்கள் 13 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் தின்னூரை அடுத்த அம்மன் நகரில் தனியாருக்குச் சொந்தமான மாட்டுத்தீவனத் தொழிற்சாலை உள்ளது. இங்கு பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை காலை உணவாக சாதம், சாம்பாா், சப்பாத்தி சாப்பிட்டுள்ளனா்.
உணவைச் சாப்பிட்டு முடித்த பிறகுதான் அதில் பல்லி விழுந்திருந்தது தெரியவந்தது. இந்த நிலையில் உணவு சாப்பிட்ட 13 பேருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கிருந்தவா்கள் பாதிக்கப்பட்டவா்களை மீட்டு ஒசூா் மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பெற்ற பிறகு அனைவரும் வீடுதிரும்பினா்.
Advertisement
Advertisement
வழக்கமாக தொழிலாளா்கள் தாங்களாகவே உணவு சமைத்துச் சாப்பிட்டு வந்த நிலையில், வெள்ளிக்கிழமை சாப்பிட்ட உணவில் பல்லி விழுந்திருந்ததால் அவா்களுக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த ஒசூா் மத்திகிரி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா்.