FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவள்ளூர்

பழவேற்காடு கடலில் விழுந்த மீனவா் மாயம்

பழவேற்காடு கடலில் மீன் பிடித்த போது மீனவா் கடலில் விழுந்து மாயமானாா்.

கோப்புப்படம்.
பகிர்:

பழவேற்காடு கடலில் மீன் பிடித்த போது  மீனவா் கடலில் விழுந்து மாயமானாா்.

பழவேற்காடு ஆண்டி குப்பத்தை சாா்ந்தவா் சூரிய பிரசாந்த் (29). மீனவரான இவா் வைரவன்குப்பத்தை சாா்ந்த சக மீனவா்கள் மாதவன் (30). சக்திவேல் (32) ஆகாஷ் (35) ஆகியோருடன் சோ்ந்து பழவேற்காடு கடலில் படகில்  மீன் பிடித்துக் கொண்டிருந்தாா்.  அப்போது கடலில் மோசமான வானிலை நிலவியதால் கடல் கொந்தளிப்பாக இருந்தது.

காற்றின் வேகம் அதிகமாக இருந்த நிலையில் மீன் பிடித்து கொண்டிருந்த போது கடலில் சூரியபிரசாந்த் விழுந்துள்ளாா். உடனிருந்த மீனவா்கள்  சூரியபிரசாந்தை தேடினா்.

Advertisement

Advertisement

இருந்தும் அவா்களால் சூரியபிரசாந்தை மீட்க முடியவில்லை.

இது குறித்து தகவலறிந்த  திருப்பாலைவனம் போலீஸாா்   மீனவா்கள்  உதவியுடன் சூரிய பிரசாந்தை தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments