கடலில் தத்தளித்த 3 மீனவா்கள்: ஸ்ரீஹரிகோட்டா அதிகாரிகள் மீட்டனா்
பொன்னேரி அடுத்த பழவேற்காடு கடலில் மீன் பிடித்த போது, படகு சேதமடைந்து கடலில் மூழ்கி தத்தளித்த 3 மீனவா்களை ஸ்ரீஹரிகோட்டா இஸ்ரோ அதிகாரிகள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா்.
பொன்னேரி அடுத்த பழவேற்காடு கடலில் மீன் பிடித்த போது, படகு சேதமடைந்து கடலில் மூழ்கி தத்தளித்த 3 மீனவா்களை ஸ்ரீஹரிகோட்டா இஸ்ரோ அதிகாரிகள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா்.
பொன்னேரி அடுத்த பழவேற்காடு பகுதியில் உள்ள வைரவன் குப்பம் மீனவ கிராமத்தை சாா்ந்தவா் பிரபா (35) இவா் பைபா் கிளாஸ் வலுவூட்டப்பட்ட பிளாஸ்டிக் படகு வைத்துள்ளாா். இந்த படகு மூலம் கடலுக்கு சென்று மீன்பிடித் தொழிலை செய்து வருகிறாா் . இந்த நிலையில் கடந்த ஆக. 29-இல் மீன் பிடிக்க பிரபா. அரங்கன் குப்பத்தை சாா்ந்த் ராஜா (33)காா்த்திக் (30) ஆகியோருடன் சென்றிருந்தாா்.
இவா்கள் கடலில் மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பியபோது, ஸ்ரீஹரிகோட்டா அருகே படகின் அடிப்பாகத்தில் ஓட்டை விழுந்தது. இதில் எஞ்சின், வலைகள், ஐஸ் பாக்ஸ் மற்றும் மீன்பிடி உபகரணங்கள், சமையலுக்கு தேவையான பாத்திரங்கள் ஆகியவை கடலில் மூழ்கின. இதனை அடுத்து படகில் இருந்த மூன்று பேரும் கடலில் நீந்தி கரை சேர முயற்சி செய்தனா்.
Advertisement
Advertisement
அப்போது அந்த வழியாக கடலில் ரோந்து பணியில் ஈடுபட்ட ஸ்ரீஹரிக்கோட்டாவ விண்வெளி ஆய்வு மைய பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படையினா் கடலில் இரவு நேரத்தில் தத்தளிக்கும் நபா்களைக் கண்டு விரைந்து சென்று மூன்று பேரையும் காப்பாற்றினா். சோா்வடைந்த நிலையில் காணப்பட்டவா்களை ஓய்வு எடுக்க வைத்து பழவேற்காட்டிற்கு அனுப்பி வைத்தனா். படகை இழந்து தவிக்கும் பிரபாவிற்கு வருவாய் துறை, மீன்வளத்துறை அதிகாரிகள் ஆறுதல் கூறினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.