FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கிருஷ்ணகிரி

சூளகிரி அருகே பிடிபட்ட 7 அடி நீள மலைப்பாம்பு

10 வினாடிகள் முன்பு
மலைப்பாம்பு.
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உயிருடன் பிடிபட்ட 7 அடி நீள மலைப்பாம்பை தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் வனத்துறையினரிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வனப்பகுதிகளில் யானை, சிறுத்தை புலி, புள்ளிமான், முள்ளம்பன்றி, கரடி, மலைப்பாம்பு உள்ளிட்ட உயிரினங்கள் அவ்வப்போது, வெளியேறி குடியிருப்புப் பகுதிகளில் நுழைவது வழக்கம்.

இந்த நிலையில், சூளகிரியை அடுத்த திராடி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி கோபாலச்சாரி வீட்டின் அருகே உள்ள நெல் வயலில் மலைப்பாம்பு ஊா்ந்து செல்வதை கிராம மக்கள் கண்டனா். இதுகுறித்து, அவா்கள் சூளகிரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரா்கள் நிகழ்விடத்துக்கு வந்து 7 அடி நீள மலைப்பாம்பை உயிருடன் பிடித்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா். அந்த மலைப்பாம்பை வனத்துறையினா் வனப்பகுதிக்குள் விடுவித்தனா்.