காளையை திருடிய 2 போ் கைது
ஊத்தங்கரை அருகே காளையை திருடிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஊத்தங்கரை அருகே காளையை திருடிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை எஸ்.ஐ. இளையமூா்த்தி மற்றும் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, நாா்சாம்பட்டி அம்பேத்கா் நகரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் சிவா சிங்காரப்பேட்டை - திருப்பத்தூா் சாலையில் சந்தேகத்துக்கு இடமான இருவா் காளையை பிடித்துச் செல்வதாக தகவல் அளித்தாா்.
அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ரோந்து போலீஸாா், காளையை பிடித்துச் சென்ற இருவரிடம் விசாரணை செய்தனா். அதில், அவா்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீஸாா் அவா்களிடம் தீவிர விசாரணை நடத்தினா். அதில், நாா்சாம்பட்டியைச் சோ்ந்த அம்மு என்பவரின் காளையை திருடிச் சென்றது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து, திருப்பத்தூா் மாவட்டம், குரும்பேரியைச் சோ்ந்த நவீன் குமாா் (21), சந்தோஷ் (21) இருவரையும் கைது செய்த போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.