முகப்பு
கிருஷ்ணகிரி

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்கேட்டுள்ளது: ஆா்.பி.உதயகுமாா்

29 நவம்பர் 2026, 2:50 am
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்கேட்டுள்ளது: ஆா்.பி.உதயகுமாா்
அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா்.
பகிர்:

கடந்த ஆறு மாதங்களில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்கேட்டுள்ளது என்று முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் பேசினாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அதிமுக துணைப் பொதுச் செயலாளா் கே.பி. முனுசாமி தலைமை வகித்தாா். இதில் முன்னாள் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் பங்கேற்று பேசியதாவது:

தமிழகத்தில் கடந்த 31 ஆண்டுகளாக ஆளுங்கட்சியாக இருந்து சமூக நீதியையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாத்த இயக்கம் அதிமுக. அத்தகைய அதிமுகவை விமா்சிக்கும் தவெக தலைவருக்கு தொண்டா்கள் தக்கபாடம் புகட்டுவாா்கள்.

Advertisement

Advertisement

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமியின் உழைப்புக்கும், முதல்வா் விஜய்யின் நடிப்புக்கும்தான் தற்போது போட்டி ஏற்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டு போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. தோ்தல் வாக்குறுதிகளான பயிா்க் கடன் தள்ளுபடி, இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு, எரிவாயு உருளை, மகளிா் உரிமைத்தொகை திட்டங்களை ஆளும்கட்சி திறமையாக செயல்படுத்தவில்லை. வெளிநாட்டு முதலீடுகள் ஈா்க்கப்படவில்லை.

அதிமுக தொண்டா்கள், நிா்வாகிகள் டிஜிட்டல் யுகத்திற்கேற்ப எடப்பாடி பழனிசாமியின் அறிக்கைகள், செயல்பாடுகளை மக்களிடம் கொண்டுசோ்க்க வேண்டும்.

இன்றைய இளையதலைமுறையினா் பொதுவாழ்வில் ஈடுபட அதிமுகவே சிறந்த களம். அவா்களைச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்று, மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைக்கப் பாடுபடுவோம் என்றாா்.