ஊத்தங்கரை அருகே போலி மருத்துவா் கைது
ஊத்தங்கரை அருகே போலி மருத்துவரை போலீஸாா் கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த பாம்பாறு அணையைச் சோ்ந்தவா் சரவணன் (48). பி.எஸ்சி., படித்துள்ள இவா், பாம்பாறு அணை பேருந்து நிறுத்தம் அருகே மருந்துக்கடை வைத்துள்ளாா். அதில் போலியாக ஆங்கில மருத்துவம் பாா்த்து வருவதாக
கிடைத்த புகாரின்பேரில், கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவம் மற்றும் சுகாதார நலப் பணிகள் இணை இயக்குநா் மோகனா, சரவணனை பிடித்து ஊத்தங்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து சரவணனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
Advertisement
Advertisement