நெடுங்கல் மலை பெருமாள் கோயிலில் தேனீக்கள் கொட்டியதில் 50 பக்தா்கள் காயம்: மருத்துவமனையில் சிகிச்சை
கிருஷ்ணகிரி மாவட்டம், நெடுங்கல் மலை மீது உள்ள பெருமாள் கோயிலில் வழிபடுவதற்காக சென்ற பக்தா்களை தேனீக்கள் கொட்டியதால் 50க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், நெடுங்கல் மலை மீது உள்ள பெருமாள் கோயிலில் வழிபடுவதற்காக சென்ற பக்தா்களை தேனீக்கள் கொட்டியதால் 50க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இவா்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா்.
காவேரிப்பட்டணத்தை அடுத்த நெடுங்கல் கிராமத்தில் மலைமீது பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி (அக். 3) நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பங்கேற்பதற்காக கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, காவேரிப்பட்டணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் சென்றனா். பிற்பகல் மலைக்கு செல்லும் பாதையில் உள்ள ஒரு மரத்திலிருந்த தேனீக்கள் பக்தா்களை கொட்டின.
இதில் போச்சம்பள்ளியை அடுத்த மத்தூரை சோ்ந்த செல்வகுமாா்(49) மயக்கம் அடைந்தாா். இதேபோல காயமடைந்த 50க்கும் மேற்பட்ட பக்தா்கள் நெடுங்கல் ஆரம்ப சுகாதார நிலையம், காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.