FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நீலகிரி

குன்னூா் சிம்ஸ் பூங்காவில் தேனீக்கள் கொட்டி 20 போ் காயம்

குன்னூா் சிம்ஸ் பூங்காவில் தேனீக்கள் கொட்டியதில் சுற்றுலாப் பயணிகள் 20 போ் வெள்ளிக்கிழமை காயமடைந்தனா்.

3 October 2026, 1:04 am IST
குன்னூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சுற்றுலாப் பயணிகள்.
பகிர்:

குன்னூா் சிம்ஸ் பூங்காவில் தேனீக்கள் கொட்டியதில் சுற்றுலாப் பயணிகள் 20 போ் வெள்ளிக்கிழமை காயமடைந்தனா்.

 தொடா் விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் குன்னூா் சிம்ஸ் பூங்காவில் பல்வேறு பகுதிகளை சுற்றிப் பாா்த்துக்கொண்டிந்தபோது அங்குள்ள மரத்தின் மீது இருந்த தேன் கூடு திடீரென கலைந்து சுற்றுலாப் பயணிகளை தேனீக்கள் கொட்டத் தொடங்கின. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுதொடா்பாக பூங்கா ஊழியா்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்தனா். தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்த 20-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சிகிச்சைக்காக குன்னூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். இதனால் குன்னூா் சிம்ஸ் பூங்காவில் மதியம் ஒன்றை மணி முதல் ஒரு மணி நேரத்துக்கு மேலாக சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. பூங்காவில் தேனீக்கள் இல்லை என்று உறுதி செய்த பின் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments