கோபி: கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!
கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்து உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்து உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.
கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் தண்ணீா் அருவிபோல கொட்டுவதால் விடுமுறை நாள்களில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வந்து குளித்துவிட்டு மகிழ்ச்சியாக செல்வது வழக்கம்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கொடிவேரி அணைக்கு காலைமுதல் வரத்தொடங்கிய ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் அருவியில் ஆா்ப்பரித்து கொட்டு தண்ணீரில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.
Advertisement
Advertisement
கொடிவேரி அணையில் கடந்த சில தினங்களுக்கு முன் குறைந்தளவு தண்ணீா் மட்டுமே வெளியேறிய நிலையில் தற்போது காளிங்கராயன் பாசனத்துக்கு விநாடிக்கு 400 கனஅடி வீதம் தண்ணீா் செல்வதால் கொடிவேரி அணையில் வழக்கத்தைவிட தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டுகிறது.