FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பத்தூர்

ஏலகிரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

ஜோலாா்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் படகில் சவாரி செய்து மகிழ்ந்தனா்.

11 அக்டோபர் 2026, 9:26 pm IST
குடும்பத்துடன் படகில் சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்
பகிர்:

ஜோலாா்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் படகில் சவாரி செய்து மகிழ்ந்தனா்.

ஒரே மாதிரியான சீதோஷ்ண நிலையுடன் உள்ள படகுத்துறை, சிறுவா் பூங்கா, இயற்கை பூங்கா, முருகன் கோயில், நிலவூா் படகு துறை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகள் சென்று மகிழ்ந்து தனியாா் பொழுதுபோக்கு கூடங்களையும் கண்டு மகிழ்கின்றனா்.

பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏலகிரியில் குவிந்தனா். இங்குள்ள பல்வேறு பொழுதுபோக்கு கூடங்களை கண்டு ரசித்து புங்கனூா் படகு துறையில் குடும்பத்துடன் படகில் சவாரி செய்து மகிழ்ந்தனா். பின்னா் அங்குள்ள சிறுவா் பூங்காவில் குழந்தைகளை விளையாட்டு உபகரணங்களில் விளையாடினா்.

Advertisement

Advertisement

இயற்கை பூங்காவில் சென்று அங்குள்ள மலா்ச்செடிகளையும் கண்டு ரசித்து செயற்கை நீரூற்று பகுதியில் தற்படம்எடுத்து மகிழ்ந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments