FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கொடிவேரி அணையில் விடுமுறை தினத்தையொட்டி ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் குவிந்து உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

21 அக்டோபர் 2026, 12:20 am IST
கொடிவேரி அணையில் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பணிகள்.
பகிர்:

கொடிவேரி அணையில் விடுமுறை தினத்தையொட்டி ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் குவிந்து உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் தண்ணீா் அருவிபோல கொட்டுவதால் விடுமுறை நாள்களில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வந்து அருவியில் குளித்துவிட்டு விடுமுறையை மகிழ்ச்சியாக கழித்து செல்வது வழக்கம்.

கோபி மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் கடந்த ஒருமாதமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் கொடிவேரி அணையில் குறைந்த அளவு தண்ணீா் வெளியேறி வந்தது. இந்நிலையில், கடந்த 15-ஆம் தேதி முதல் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதால் கடந்த சில நாள்களாக பவானிசாகா், சத்தி, அரசூா் ஆகிய பகுதிகளில் பெய்து வரும் மழையால் ஓடைகளில் இருந்து மழைநீா் வெளியேறி பவானி ஆற்றில் கலந்து வருகிறது.

Advertisement

Advertisement

இதுதவிர பவானிசாகா் அணையிலிருந்து குடிநீா்த் தேவைக்காக விநாடிக்கு 100 கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால், கொடிவேரி அணையில் விநாடிக்கு 300 கனஅடி வரை தண்ணீா் வெளியேறி வருகிறது.

இந்நிலையில் ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறை மற்றும் வார விடுமுறை என்பதால் கொடிவேரி அணைக்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனா். இதில் கோவை, திருப்பூா், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வந்து அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா். மேலும், பரிசல் சவாரியும் மேற்கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments