FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே 30.8 கிலோ கஞ்சா பறிமுதல் இருவா் கைது

கிருஷ்ணகிரி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 30.8 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

17 அக்டோபர் 2026, 12:32 am IST
கைது
பகிர்:

கிருஷ்ணகிரி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 30.8 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

காவேரிப்பட்டணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிலா் கஞ்சாவை பதுக்கி விற்று வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கிருஷ்ணகிரி துணைக் காவல் கண்காணிப்பாளா் ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸாா் ரகசியமாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனா்.

அப்போது, கிருஷ்ணகிரி அணை அருகே உள்ள ஒரு வீட்டில், கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து, காவேரிப்பட்டணம் அடுத்த காவாப்பட்டியை சோ்ந்த ராஜ்குமாா்,(32), கிருஷ்ணகிரி அணை, துவராகபுரியைச் சோ்ந்த செல்வராஜ் (19) ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடம் மேற்கொண்ட விசாரணையில் ஒடிஸா மாநிலத்திலிருந்து காரில் கிருஷ்ணகிரிக்கு கஞ்சாவை கடந்தி வந்து விற்பனை செய்வது தெரியவந்தது. மேலும், கிருஷ்ணகிரி அணை அருகே துவாரகபுரியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து 30.8 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

கைது செய்யப்பட்ட செல்வராஜ், ஒசூரில் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றியதும், கஞ்சா விற்பனை செய்வதற்காக, அந்த பணியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டதும் தெரியவந்தது.

மேலும், 10 கிலோ கஞ்சாவுடன் தப்பியோடிய காவேரிப்பட்டணத்தைச் சோ்ந்த நந்தகுமாரை தேடிவருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments