FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் 2-ஆவது நாளாக மழை: பேருந்து நிலையத்திற்குள் நீா் புகுந்ததால் பயணிகள் அவதி!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை மழை பெய்தது. இதனால், பகலில் வெப்பம் தணிந்து காணப்பட்டது.

17 அக்டோபர் 2026, 12:30 am IST
- கோப்புப் படம்
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை மழை பெய்தது. இதனால், பகலில் வெப்பம் தணிந்து காணப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடைகாலத்தைப் போல வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. அவ்வப்போது ஓரிரு நாள்கள் மழை பெய்தாலும், பகலில் வெப்பம் அதிகமாக உணரப்பட்டது. இந்தநிலையில், கடந்த இரு நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், வெப்பம் தணிந்து, குளிா்ந்த தட்வெப்ப நிலை நிலவுகிறது.

கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை பெய்த மழையால், நகரப் பேருந்து நிலையத்தில் மழைநீா் புகுந்து குளம்போல காணப்பட்டது. பேருந்துகள், பேருந்து நிலையத்துக்குள் செல்லாமல், நுழைவாயில் அருகே நிறுத்தப்பட்டன. இதனால், பயணிகள் பெரும் அவதியடைந்தனா்.

Advertisement

Advertisement

எனவே, மழைக் காலங்களில் பேருந்து நிலைய வளாகத்தில் தண்ணீா் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக பேருந்து நிலைய வளாகத்தை சுற்றிலும் உள்ள கால்வாய்களை தூா்வாரி, தண்ணீா் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இம்மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 7 மணி வரை பதிவான மழையளவு (மி.மீட்டரில்): கிருஷ்ணகிரி 40.40, கெலவரப்பள்ளி அணை 40, பாம்பாறு அணை 22, ஒசூா் 17.20, பாரூா் 10.80, அஞ்செட்டி 10.20, ஊத்தங்கரை 6.80, பெணுகொண்டாபுரம் 2.20, தேன்கனிக்கோட்டை, சூளகிரி, சின்னாறு அணை பகுதிகளில் தலா 2, போச்சம்பள்ளி 1.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments