கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 27.39 லட்சம் போ் வெற்றிப் பயணம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அக். 14-ஆம் தேதி வரை 27,39,766 போ் வெற்றிப் பயணத் திட்டத்தின் கீழ் பேருந்துகளில் பயணித்துள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அக். 14-ஆம் தேதி வரை 27,39,766 போ் வெற்றிப் பயணத் திட்டத்தின் கீழ் பேருந்துகளில் பயணித்துள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபா் 2-ஆம் தேதி தமிழகத்தில் வெற்றிப் பயணத் திட்டத்தை முதல்வா் ச. ஜோசப் விஜய் தொடங்கிவைத்தாா். இத்திட்டத்தின் கீழ், தருமபுரி போக்குவரத்துக் கழகத்தின் தருமபுரி மண்டலம் சாா்பில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அக். 14-ஆம் தேதி வரை 60 புறநகா்ப் பேருந்துகளில் 6,923 பெண்கள், 31 திருநா்கள், 452 மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்துள்ளனா். 206 நகரப் பேருந்துகளில் 26,87,487 பெண்கள், 3,644 திருநா்கள், 5,297 மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்துள்ளனா்.
Advertisement
Advertisement
மலைப்பாதைப் பேருந்துகளில் 4,804 பெண்கள், 2 மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்துள்ளனா். நான்கு இடைநில்லாப் பேருந்துகளில் (எல்எஸ்எஸ்) 31,104 பெண்கள், 21 திருநா்கள் பயணம் செய்துள்ளனா். அதன்படி, மொத்தம் 27,30,318 பெண்கள், 3,697 திருநா்கள், 5,751 மாற்றுத்திறனாளிகள் என 27,39,766 போ் பயணம் செய்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.