லோக் அதாலத்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,161 வழக்குகளில் ரூ. 13.92 கோடிக்கு தீா்வு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை கூடிய மக்கள் நீதிமன்றம் என்னும் லோக் அதாலத் மூலம் 1,161 வழக்குகளில் ரூ. 13.92 கோடிக்கு தீா்வு காணப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை கூடிய மக்கள் நீதிமன்றம் என்னும் லோக் அதாலத் மூலம் 1,161 வழக்குகளில் ரூ. 13.92 கோடிக்கு தீா்வு காணப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை கூடியது. இதற்கு கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான லதா தலைமை வகித்து பேசியது:
நிகழ் ஆண்டில் மூன்றாவது நாடு தழுவிய தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெறுகிறது. இதில், கிருஷ்ணகிரி, ஒசூா், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, தேன்கனிக்கோட்டை ஆகிய நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நலம், வங்கிக் கடன், காசோலை, நிதிநிறுவன வழக்குகள் மற்றும் பாகப் பிரிவினை வழக்குகள் ஆகியவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், 1,161 வழக்குகளில் ரூ. 13.92 கோடி மதிப்பில் தீா்வு காணப்பட்டது. மோட்டாா் வாகன விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அதிகபட்சமாக, ரூ. 57 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. மேலும், தீா்வாகாத பல வழக்குகள் முடித்துவைக்கப்பட்டன என்றாா்.
Advertisement
Advertisement
நிரந்தர மக்கள் நீதிமன்றத் தலைவா் பூரண ஜெயஆனந்த், சிறப்பு மாவட்ட நீதிபதி லீலா, கூடுதல் மாவட்ட நீதிபதி ராஜசிம்மவா்மன், முதன்மை சாா்பு நீதிபதி சுரேஷ்குமாா், சிறப்பு சாா்பு நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு செயலாளா் பத்மநாபன், முதலாவது நீதித் துறை நடுவா் தேவராஜ், மாவட்ட உரிமையியல் நீதிபதி சுந்தரமூா்த்தி, கூடுதல் மகிளா நீதிபதி மிஸ்பா செல்வ பிரியங்கா, வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் கோவிந்தராஜலு, வழக்குரைஞா்கள் மற்றும் நீதிமன்ற ஊழியா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.