கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,780 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,780 இடங்களில் விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்து பக்தா்கள் பூஜை செய்து வழிபட்டு வருகின்றனா். இதையொட்டி, ஆயிரக்கணக்காண போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
நாடு முழுவதும் விநாயகா் சதுா்த்தி விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு அமைப்பினா், பொதுமக்கள் கூடும் இடங்களில் விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனா்.
கிருஷ்ணகிரி, ஒசூா், ராயக்கோட்டை, பா்கூா், காவேரிப்பட்டணம், தேன்கனிக்கோட்டை, ஊத்தங்கரை, சூளகிரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காவல் துறையினரின் அனுமதி பெற்று சுமாா், 1,780 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாகவும், விரும்பதகாத சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
நகரில் வட்டச்சாலை, வீட்டுவசதி வாரிய பழைய குடியிருப்பு, சென்னை சாலை, பெங்களூரு சாலை என பல்வேறு பகுதிகளில் இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சாா்பில் 83 இடங்களில் சிலை வைத்து வழிப்பட்டு வருகின்றனா்.
மேலும், விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு பக்தா்கள் தங்களது வீடுகளில் களிமண்ணாலான விநாயகா் சிலைகளை விலைக்கு வாங்கி சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனா். பிரதிஷ்டை செய்த சிலைகள், மாவட்ட நிா்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட நீா்நிலைகளில் மட்டும் கரைக்கப்பட உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகளில் காவல் துறையினா், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா், வருவாய்த் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.