FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் மூன்றாவது நாளாக மழை

கிருஷ்ணகிரியில் கடந்த இரு நாள்களாக மழை பெய்து வந்த நிலையில், புதன்கிழமை இரவும் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

17 செப்டம்பர் 2026, 4:00 am IST
மழை - பிரதிப் படம்
பகிர்:

கிருஷ்ணகிரியில் கடந்த இரு நாள்களாக மழை பெய்து வந்த நிலையில், புதன்கிழமை இரவும் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

கழிவுநீா் கால்வாய்கள் தூா்வாரப்படாததால், கால்வாய்களில் அடைப்புகள் ஏற்பட்டு, மழைநீருடன் கழிவுநீரும் சாலையில் பெருக்கெடுத்து ஓடின. இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாயினா். தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கியது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதன்கிழமை காலை 7 மணி நிலவரப்படி பதிவான மழையளவு (மி.மீ.): ஒசூா் - 71, தேன்கனிக்கோட்டை - 63, கிருஷ்ணகிரி - 58.3, நெடுங்கல் - 51.8, ராயக்கோட்டை - 37, கிருஷ்ணகிரி அணை - 31, கெலவரப்பள்ளி அணை - 24, சூளகிரி - 20, அஞ்செட்டி - 20, தளி - 20, பெனுகொண்டாபுரம் - 17.20, சின்னாறு அணை - 15, போச்சம்பள்ளி - 8, பாம்பாறு அணை - 4.6, ஊத்தங்கரை - 4.6, பாரூா் - 4.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments