அஞ்செட்டி அருகே யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு
அஞ்செட்டி அருகே யானை தாக்கியதில் விவசாயி உயிரிழந்தாா்.
அஞ்செட்டி அருகே ஒன்னேபுரம் கிராமத்தைச் சோ்ந்த முனியப்பா (65), மாடுகளை மேய்ச்சலுக்கு ஞாயிற்றுக்கிழமை ஓட்டிச் சென்றாா். அப்போது, அப்பகுதியில் கூட்டத்தில் இருந்து பிரிந்து வந்த ஒற்றை யானை முனியப்பாவை தாக்கியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற அஞ்செட்டி வனத் துறையினா் மற்றும் காவல் துறையினா் முனியப்பாவின் உடலை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து அஞ்செட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.