FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பெண்ணை கேலி செய்ததாக 4 பேர் கைது

பரமத்தி வேலூர் வட்டம், பாண்டமங்கலம் அருகே, கோப்பனம்பாளையத்தில் பெண்ணைக் கேலி செய்ததாக 4 பேரை பரமத்தி வேலூர் போலீஸார் கைது செய்தனர்.

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

பரமத்தி வேலூர் வட்டம், பாண்டமங்கலம் அருகே, கோப்பனம்பாளையத்தில் பெண்ணைக் கேலி செய்ததாக 4 பேரை பரமத்தி வேலூர் போலீஸார் கைது செய்தனர்.

கோப்பனம்பாளையத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (30). இவர் தனது மனைவி, மனைவியின் தங்கையுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் மாயவன் (24), சண்முகம் மகன் சுரேஷ் (26), குமரேசன் மகன் சக்திவேல் (19), மணி மகன் குணசேகரன் (26) ஆகிய நான்கு பேரும் பெண்களை கேலி செய்தனராம்.

இதையடுத்து, வேலுச்சாமி அவர்களைத் தட்டிக்கேட்டாராம். இதில், வாய்த்தகராறு ஏற்பட்டதாம். பின்னர், ஞாயிற்றுக்கிழமை இரவு நான்கு பேரும் வேலுச்சாமியின் வீட்டுக்குச் சென்று அவரைத் தாக்கினராம். இதில், காயமடைந்த வேலுச்சாமி பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில், பரமத்தி வேலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments