மனைவி கொலை வழக்கில் கணவருக்கு ஆயுள் சிறை
மனைவியை வெட்டிக் கொன்ற வழக்கில் கணவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
மனைவியை வெட்டிக் கொன்ற வழக்கில் கணவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள பூசாரிபாளையத்தைச் சேர்ந்தவர் நாகராஜன் (44). இவரது மனைவி தேன்மொழி (29) நடத்தையில் சந்தேகம் கொண்டு அடிக்கடி பிரச்னையில் ஈடுபட்டு வந்தார். கடந்த 5-10-2012 அன்று தம்பதி இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நாகராஜன், தேன்மொழியை அரிவாளால் வெட்டியதில் அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து நாமகிரிப்பேட்டை போலீஸார் நாகராஜனை கைது செய்தனர்.
Advertisement
Advertisement
இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், வழக்கு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.ராமதிலகம் குற்றம்சாட்டப்பட்ட நாகராஜனுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.