FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கர்நாடகத்தில் லேசான நிலநடுக்கம்!

கர்நாடகத்தில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் பற்றி...

நிலநடுக்கம்.
பகிர்:

கர்நாடகத்தின் சிக்கபல்லாபூராவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.

கர்நாடக மாநிலம், சிக்கபல்லாபூரா மாவட்டத்தில் சனிக்கிழமை அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 2.9ஆகப் பதிவானதாக கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம் கௌரிபிதனூர் தாலுகாவில் உள்ள சோமசெட்டிஹள்ளி கிராமத்திற்கு அருகில் இருந்தது.

இந்த நிலநடுக்கமானது அதிகாலை 3.29 மணிக்கு, 5 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நிலநடுக்கத்தின் மையப்புள்ளி கௌரிபிதனூர் தாலுகாவில் உள்ள தாரிடாலு கிராம பஞ்சாயத்திற்கு தென்மேற்கே 2.53 கி.மீ தொலைவிலும், அலிபுரா கிராம பஞ்சாயத்திற்கு வடமேற்கே 4.30 கி.மீ தொலைவிலும், சிக்கபல்லாபூர் நகரத்திற்கு வடமேற்கே 33 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

"நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து கணக்கிடப்பட்ட நில அதிர்வு தீவிர வரைபடத்தின்படி, இதன் தீவிரம் குறைவாகவே உள்ளது. மையப்புள்ளியிலிருந்து 20 முதல் 30 கி.மீ சுற்றளவு வரை அதிர்வுகள் உணரப்பட்டிருக்கலாம்" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் தீவிரம் குறைவாக இருப்பதால், உள்ளூர் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை என்றும், இருப்பினும் லேசான அதிர்வுகள் உணரப்பட்டிருக்கலாம் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் அளவு மற்றும் தீவிரம் குறைவாகவே இருப்பதால் மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

summary

An earthquake of 2.9 magnitude was recorded in Chikkaballapura district in the wee hours of Saturday, the KSNDMC said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments