பெங்களூரு அருகே லேசான நிலநடுக்கம்: ரிக்டா் அளவில் 3.0 ஆகப் பதிவு
கா்நாடக மாநிலம், பெங்களூரு ஊரக மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 3.0 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தின் மையம், தொட்டபள்ளாபுரா வட்டத்தில் உள்ள திம்மோஜனஹள்ளி கிராமத்துக்கு அருகே அமைந்திருந்ததாக கா்நாடக மாநில இயற்கைப் பேரிடா் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
கா்நாடக மாநிலம், பெங்களூரு ஊரக மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 3.0 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தின் மையம், தொட்டபள்ளாபுரா வட்டத்தில் உள்ள திம்மோஜனஹள்ளி கிராமத்துக்கு அருகே அமைந்திருந்ததாக கா்நாடக மாநில இயற்கைப் பேரிடா் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை காலை 9.01 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் நிகழ்ந்ததாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் மையம், திம்மோஜனஹள்ளி கிராமத்துக்கு வடக்கே அரை கிலோமீட்டா் தொலைவில் அமைந்திருந்தது.
மேலும், தொட்டபள்ளாபுரா வட்டத்தில் உள்ள நரகனஹள்ளி கிராமத்துக்கு தென்கிழக்கே அதே தொலைவிலும், துபாகெரே கிராம ஊராட்சிக்கு தென்கிழக்கே 1.1 கி.மீ. தொலைவிலும், கா்னாலா கிராம ஊராட்சிக்கு வடமேற்கே 1.35 கி.மீ. தொலைவிலும் நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
நிலநடுக்க மையத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட நில அதிா்வு தீவிர வரைபடத்தின்படி, நில அதிா்வின் தீவிரம் குறைவாக இருந்தது. நிலநடுக்க மையத்தில் இருந்து 20 முதல் 30 கி.மீ. சுற்றளவு வரையிலான பகுதிகளில் அதிா்வை உணா்ந்திருக்க வாய்ப்புள்ளது என்று அந்த மையம் தெரிவித்துள்ளது.
நில அதிா்வின் தீவிரம் குறைவாக இருந்தால், இதுபோன்ற நிலநடுக்கத்தால் உள்ளூா் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றும், சில இடங்களில் மட்டும் நில அதிா்வை உணா்ந்திருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்க மையம், நில அதிா்வு மண்டலம் 2-இல் அமைந்துள்ளது. அப்பகுதியில் கட்டமைப்பு ரீதியான புவியியல் இடைவெளிகள் எதுவும் இல்லை என்றும் கா்நாடக மாநில இயற்கைப் பேரிடா் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று தெரியவந்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.