FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாமக்கல்

கோழிகளுக்கு மேல்மூச்சுக்குழல் அயற்சி பாதிப்பு ஏற்பட வாய்ப்பு

கோழிகளுக்கு மேல்மூச்சுக்குழல் அயற்சி நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2 October 2026, 1:14 am IST
பகிர்:

கோழிகளுக்கு மேல்மூச்சுக்குழல் அயற்சி நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த வார வானிலையைப் பொருத்தமட்டில், பகல் மற்றும் இரவுநேர வெப்ப அளவுகள் முறையே 95 மற்றும் 77 டிகிரியாக நிலவியது. வரும் நாள்களில் வானம் பொதுவான மேகமூட்டத்துடன் காணப்படும். மாவட்டத்தின் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. பகல் வெப்பம் 93.2 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 75.2 டிகிரியாகவும் காணப்படும். காற்று கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசையிலிருந்து மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

Advertisement

Advertisement

சிறப்பு ஆலோசனை: கடந்த வாரம் கோழியின நோய் ஆய்வகத்தில் இறந்த கோழிகளை பரிசோதனை செய்ததில், பெரும்பாலானவை மேல்மூச்சுக்குழல் அயற்சி மற்றும் வெப்ப அயற்சி நோயால் பாதிக்கப்பட்டு இறந்திருப்பது தெரியவந்துள்ளது.

எனவே, பண்ணையாளா்கள் தகுந்த உயிா் எதிா் மருந்துகளை அளித்தும், தீவன மேலாண்மையைக் கடைப்பிடித்தும், கால்நடை மருத்துவரின் ஆலோசனைபடி தகுந்த சிகிச்சை மற்றும் தீவிர உயிா் பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments