FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

கோழிகளுக்கு மேல்மூச்சுக்குழல் அயற்சி பாதிப்பு ஏற்பட வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

கோழிகளுக்கு மேல்மூச்சுக்குழல் அயற்சி மற்றும் நாள்பட்ட சுவாச நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

29 ஆகஸ்ட் 2026, 1:04 am IST
கோப்புப் படம்
பகிர்:

கோழிகளுக்கு மேல்மூச்சுக்குழல் அயற்சி மற்றும் நாள்பட்ட சுவாச நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்தவார வானிலையை பொருத்தமட்டில், பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 95.0 மற்றும் 77.0 டிகிரியாக நிலவியது. அடுத்த ஐந்து நாள்களுக்கான மாவட்ட வானிலையில், வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் ஐந்து நாள்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. பகல் வெப்பம் 98.6 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 77 டிகிரியாகவும் காணப்படும். காற்றின் திசை பெரும்பாலும் மேற்கு திசையிலிருந்து மணிக்கு 8 கி.மீ. என்றளவில் வீசும்.

Advertisement

Advertisement

சிறப்பு ஆலோசனை: கோழியின நோய் ஆய்வகத்தில் இறந்த கோழிகளை பரிசோதனை செய்ததில் பெரும்பாலும் நாள்பட்ட சுவாச நோய் மற்றும் மேல்மூச்சுக்குழல் அயற்சி நோய்களால் பாதிக்கப்பட்டு இறந்திருப்பது தெரியவந்துள்ளது. எனவே, பண்ணையாளா்கள் தகுந்த உயிா் எதிா் மருந்துகளை அளித்தும், தீவன மேலாண்மை முறையை கடைப்பிடித்தும், கால்நடை மருத்துவரின் ஆலோசனைகளை பெற்றும் தகுந்த சிகிச்சை மற்றும் தீவிர உயிா்- பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments