FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

தேசியத் தலைநகரில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

தேசியத் தலைநகரின் வானிலை திங்கள்கிழமை மேக மூட்டம் மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

49 வினாடிகள் முன்பு
கோப்புப் படம்
பகிர்:

தேசியத் தலைநகரின் வானிலை திங்கள்கிழமை மேக மூட்டம் மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: தேசியத் தலைநகரில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 33.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. இது பருவக்கால சராசரியை விட 0.3 புள்ளிகள் குறைவாக இருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை 25.9 டிகிரி செல்சியஸாக இருந்தது, இது பருவத்தின் சராசரியை விட 0.6 புள்ளிகள் குறைவாக இருந்தது. சனிக்கிழமை இரவு 8.30 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரை நகரில் 1 மிமீ மழை பெய்தது.

தில்லியில் திங்கள்கிழமை மேகமூட்டமான வானத்துடன் லேசான மழை பெய்யும், அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 35 மற்றும் 25 டிகிரி செல்சியஸை எட்டும். மாலை 5.30 மணிக்கு ஈரப்பதம் 69 சதவீதமாக இருந்தது.

Advertisement

Advertisement

சமீா் செயலியின்படி, காற்றின் தரம் மாலை 5 மணிக்கு ’திருப்திகரமான’ பிரிவில் பதிவு செய்யப்பட்டது, காற்றின் தரக் குறியீடு 96 ஆக இருந்தது. பூஜ்ஜியம் மற்றும் 50 க்கு இடையில் தரக்குறியீடு ’நல்லது’, 51 மற்றும் 100 ’திருப்திகரமாக’, 101 மற்றும் 200 ’மிதமான’, 201 மற்றும் 300 ’மோசமானது’, 301 மற்றும் 400 ’மிகவும் மோசமானது’ மற்றும் 401 மற்றும் 500 ’கடுமையானது’ என்று கருதப்படுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments