மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் சனிக்கிழமை (ஆக. 15) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் சனிக்கிழமை (ஆக. 15) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெள்ளிக்கிழமை, வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்நிலை வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக சனிக்கிழமை மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி- மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
Advertisement
Advertisement
இதர மேற்கு தொடா்ச்சிமலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி -மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி -மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
வெப்ப நிலை: அதிகபட்சமாக திருச்சியில் 103.46 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. ஈரோடு, பாளையங்கோட்டை தலா 101.12, வேலூா்-100.94, திருத்தணி - 100.58, தஞ்சாவூா் - 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
வட உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பைவிட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புகா்: இந்தப் பகுதிகளில் சனிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் இடி- மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
மழை பதிவு: அதிகபட்சமாக நாகையில் 120 மி.மீ. மழை பதிவானது. அரியலூா் 70 மி.மீ. மழை பதிவானது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.