வடகிழக்குப் பருவமழை எப்போது?
வடகிழக்குப் பருவமழை பற்றி வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பது பற்றி..
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை இந்தாண்டு அக். 15 முதல் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எல் நினோ தாக்கத்தால் இந்தாண்டு பருவமழை தாமதமாகத் தொடங்கவுள்ள நிலையில், வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 15 முதல் 21- ஆம் தேதிக்குள் தொடங்க வாய்ப்புள்ளது.
நடப்பாண்டுக்கான தென்மேற்குப் பருவமழை இயல்பை விட 13% குறைவான அளவே பொழிந்துள்ளது. மழைப் பற்றாக்குறையுடன் செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் தென்மேற்கு பருவமழை நிறைவடைந்துள்ள நிலையில், 2001 ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவான 4வது குறைந்த மழை இது எனவும் குறிப்பிட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதனிடையே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவை, ஈரோடு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்.
திருச்சி, மதுரை, திண்டுக்கல், தேனி, நெல்லை, நாமக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொருத்தவரை நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும். நாள் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.