FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ராசிபுரம் பாவை கல்வி நிறுவனம் கட்டடப் பொறியாளர்கட்டமைப்பு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ராசிபுரம் பாவை காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, தமிழ்நாடு கட்டடப் பொறியாளர் கட்டமைப்பு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

9 ஜனவரி 2024, 12:12 pm
பகிர்:

ராசிபுரம் பாவை காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, தமிழ்நாடு கட்டடப் பொறியாளர் கட்டமைப்பு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சிவில் இன்ஜினியரிங் அசோசியேசன் பெடரேசன் தலைவர் ஆர்.மோகன்ராஜ் பங்கேற்று கட்டடவியல் துறையின் நவீனத்துவம் குறித்துப் பேசினார்.

கல்லூரித் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன், பேசியட் அமைப்பின் அதிகாரி ஆர்.சிவலிங்கம் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுப் பரிமாறிக் கொண்டனர் .

Advertisement

Advertisement

அமைப்பின் நிர்வாகிகள் எம்.எஸ்.ராஜமாணிக்கம், ஆர்.சிவலிங்கம், ஆர்.முனுசாமி, ஆர்.கைலாசம், ஏ.வேலுசாமி, நாமக்கல் கட்டடப் பொறியாளர் சங்கத் தலைவர் என்.செல்வக்குமார், பாவை கல்வி நிறுவனங்களின் இயக்குநர் கே.செந்தில் மற்றும் பொறியியல் துறை மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments