18 நாள்களாக குடிநீர் விநியோகம் இல்லை
18 நாள்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என, நகராட்சி மக்கள் ஆட்சியரிடம் முறையிட்டனர்.
18 நாள்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என, நகராட்சி மக்கள் ஆட்சியரிடம் முறையிட்டனர்.
இதுகுறித்து என்.கொசவம்பட்டி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தியிடம் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:
நாமக்கல் நகராட்சிக்கு உள்பட்ட 32-ஆவது வார்டு கொசவம்பட்டியில் குடியிருந்து வருகிறோம். இந்தப் பகுதியில் கடந்த மாதம் 26-ஆம் தேதி முதல் திங்கள்கிழமை (செப்.14) வரை குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. மின் மோட்டார் பழுதடைந்ததாக கூறுகின்றனர்.
Advertisement
Advertisement
இதுவரை மோட்டாரைச் சீரமைக்கவில்லை. கொசவம்பட்டியில் பெரிய வீதியில் உள்ள தொட்டியில் தண்ணீர் ஏற்றுவதால் மேட்டுத் தெரு, மாரியம்மன் கோயில் பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதில்லை. எனவே, உடனடியாக நடவடிக்கை எடுத்து குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.